நிறைவேற்று சபை அங்கீகாரமளித்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தவணைக்கான நிதியை இலங்கை பெற்றுக் கொள்ளும்! செஹான் சேமசிங்க
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்பு பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரமளித்தால், எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை முதல் தவணை நிதித்தொகையைப் பெற்றுக் கொள்ளும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெற்றுக் கொள்ளும்
எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையில், இலங்கைவின் பிணையெடுப்புக்காக கடந்த செப்டம்பரில் எட்டப்பட்ட பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் குறித்த பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை
அங்கீகாரமளித்தால், முதல் தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலரை
இலங்கை பெற்றுக் கொள்ளும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க
தெரிவித்துள்ளார்.