இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும்
இலங்கை தனது வெளிநாட்டு கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான இலட்சியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது என பிரபல ஆங்கில செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் 20 அன்று சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியுடன் எளிதாக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் கடனை வழங்கும்.

உலக வங்கி ஏற்கனவே1.5 பில்லியன் வழங்க உறுதியளித்துள்ளது, இது போல ஆசிய அபிவிருத்தி வங்கி 1 பில்லியன் டொலர் உதவியை வழங்கும்.
வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கும்
அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு மூலம் 3 பில்லியன் டொலர் கிடைக்கும்.

சர்வதேச நாணய நிதியம் நிதியை வழங்கத் தொடங்கிய பின்னர், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இவை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும்.
எனவே அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்படும் என ராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri