பதுளையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்
பதுளை - கந்தகொல்ல பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலமானது நேற்று (02.01.2023) பிற்பகல் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
இதன்போது பதுளை - தமன்வர கந்தகொல்ல, புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
மேற்படி இளைஞர் நேற்று (01) வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால் இன்று (02) காலை அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கந்தகொல்லை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஹெய்னரன்கொல்ல ஓயா பாலத்துக்கு அருகில் அவரின் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நீரோடையின் கீழ் பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போதே உயிரிழந்தவரின் சடலம் நேற்று (02) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan