நாட்டில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது (Video)
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு எதிராக விளக்கமறியல் உத்தரவு பெறப்பட்டுள்ளது என மேலும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேகநபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில், ஹெரோயின் - 613 கிராம் ஐஸ் - 746 கிராம் கஞ்சா - 16 கிலோ 500 கிராம் கஞ்சா செடிகள் - 2,72,041 ஹஷீஷ் - 263 கிராம் மாவா - 49 கிலோ 400 கிராம் ஹேஷ் - 16 கிராம் தூள் - 852 கிராம் மதன மோதகம் - 479 கிராம் போதை மாத்திரைகள் - 3,142 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |