கட்டைக்காட்டு கடற்பரப்பில் 18 பேர் கடற்படையால் கைது
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பில் 18பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(15.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் சுற்றிவளைப்பு
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் முறைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒளி பாய்ச்சி கடற்றொழில் ஈடுபட்ட 18பேர் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் வெற்றிலைக்கேணி மற்றும் சுண்டிக்குள கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam