கடந்த 08 மாதங்களில் பாதாள உலகக் குழு துப்பாக்கிச் சூடுகளில் 18 பேர் பலி
கடந்த எட்டு மாத காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் விசாரணை
மித்தேனிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை 'பெக்கோ சமன்' என்ற பாதாள உலகக் குழுத் தலைவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
பாதாள உலக ஆயுதமேந்திய குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை 28 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்தத் தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri