மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை! வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில் நிறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும், நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும், வீதிப்போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam