சீனாவில் உள்ள வணிக வளாகத்தில் பாரிய தீ விபத்து
தென்மேற்கு சீனாவின்(China) சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (17) சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு குழுவினர்
இதன்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேரை மீட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின் படி, கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் அவசரகால மேலாண்மை மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிர்வாக அமைச்சகம், சம்பவம் குறித்து விசாரணை நடத்த பணிக்குழுவை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிபுணர்கள் அனுப்பப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam