15 வருடமாக சேவையில் ஈடுபட்ட பேருந்தே சொகுசு பேருந்து சேவையாக மாற்றம்..!
முல்லைத்தீவு - கொழும்பு வழித்தடத்தில் கடந்த 15 வருடமாக சேவையில் ஈடுபட்ட பேருந்து சேவையே சொகுசு பேருந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக குறித்த வழித்தடத்தில் ஈடுபடும் சொகுசு பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைலைத்தீவு - கொழும்பு சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில வெளி மாவட்டத்திற்கு அவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கேட்ட போது அதன் உரிமையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சொகுசு பேருந்து சேவைக்கான தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சொகுசு பேருந்து கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு - கொழும்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
இதன்போது பயணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், மக்கள் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் சாதாரண சேவையில ஈடுபட்ட எனது பேருந்தின் வழித்தட அனுமதி சொகுசு பேருந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாக குறித்த அனுமதி முறைப்படி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே முல்லைத்தீவு - கொழும்பு சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேலும் சொகுசு பேருந்து சேவைக்கான தேவை இருக்கின்றது. அதனை தேவையானவர்கள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று சேவையில் ஈடுபட முடியும்.
அதைவிடுத்து, எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பொய்யான பரப்புரைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொள்பவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் உண்மை நிலையை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri