முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு: நவம்பரில் தீர்ப்பு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை நவம்பர் 17ஆம் திகதி வெளியிட இருப்பதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்க
கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri