டெல்லியில் வெடிப்பு ஏற்பட முன் வெளியிடப்பட்ட சுவரொட்டி.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
13 பேர் உயிரிழந்த டெல்லி வெடிப்பு சம்பவத்திற்கு இருபத்தி ஆறு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது குழுவின் துண்டுப்பிரசுரம் ஒன்று ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள நவ்காமில் வெளியிடப்பட்டுள்ளது.
குறி்த துண்டுபிரசுரமானது, காஷ்மீரின் இந்தியப் படைகள் மற்றும் உள்ளூர்வாசிகளை எச்சரிக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
1990கள்-2000களில் இதுபோன்ற தீவிரவாத எச்சரிக்கைகள் பொதுவாக விடுக்கப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
அச்சுறுத்தல்கள்
இருப்பினும், 2019இல் இந்தியா - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததிலிருந்து இது குறைந்து விட்டதாக இந்திய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும், 2018இல் 597ஆக இருந்த தாக்குதல்கள் 2025இல் 145ஆகக் குறைந்து விட்டதாகவும் இந்த துண்டுப்பிரசுரம் பல இந்திய மாநிலங்களில் மூன்று வார விசாரணையைத் தூண்டியதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை காஷ்மீரிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எனவே, டெல்லியில் நடந்த வெடிப்பு சம்பவம் முன்னதாகவே திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam