கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு வழக்குகள்: பத்து வருட கடூழிய சிறை தண்டனை

Sri Lanka Police Kilinochchi Child Abuse Crime Sri Lankan Schools
By Sudaron Aug 10, 2023 04:04 PM GMT
Report

கிளிநொச்சியில் பதினான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை அவரது பாதுகாவலரிடம் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 30 வயதுடைய எதிரிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு வழக்குகள்: பத்து வருட கடூழிய சிறை தண்டனை | 14 Year Old Girl Was Sexually Assaulted

கடூழிய சிறை தண்டனை

அத்துடன் குறித்த 14 வயதுச் சிறுமியை பாதுகாவலர்களிடமிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தண்டப்பணம் செலுத்த தவறும் சந்தர்ப்பத்தில் பன்னிரெண்டு மாத கால சாதரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும், இழப்பீடு செலுத்த தவறின் பன்னிரெண்டு மாத கால சாதரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை

இதே நேரம், கடந்த 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதினைந்து வயதும் எட்டு மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை பதினெட்டு வயதுடைய இளைஞர் ஒருவர் பாடசாலை கல்வியை தொடர்ந்த சந்தர்ப்பத்தில் காதலித்து குறித்த சிறுமியை பாதுகாவலரிடம் இருந்து கடத்திச் சென்று திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு இன்றைய (10.08.2023) தினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு வழக்குகள்: பத்து வருட கடூழிய சிறை தண்டனை | 14 Year Old Girl Was Sexually Assaulted

குறித்த வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட இளைஞர் அவரது பாடசாலைக் காலத்தில் குற்றத்தை அறியாது திருமணமாகி குடும்பத்துடன் வாழும் எண்ணத்தில் சிறுமியை அழைத்து சென்றதாகவும் சிறுமியும் முழுமையான விருப்பத்துடன் அவருடன் சென்று வாழ்ந்த நிலையில் குறித்த சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது

மேற்படி விடயங்களை கவனத்தில் எடுத்த மன்று இளைஞனுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம் நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் தலா ஆறுமாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றத்திற்கு பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்குகள் இரண்டும் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US