16 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு: ஓய்வு பெற்ற பொலிஸ் சாஜனுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற பொலிஸ் சாஜன் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (07.08.2023) உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் சாஜன் சம்பவதினமான கடந்த சனிக்கிழமை பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்ற சிறுவன் ஒருவனை அப்பகுதியில் வைத்து பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட நிலையில் பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்த நிலையில் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பொலிஸ் சாஜன் ஏற்கனவே கடமையாற்றி வந்த காலங்களில் சம்பவங்கள் தொடர்பாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அண்மையில் ஓய்வு பெற்றவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட வரை நேற்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
