ஆசிரியரின் தகாத செயலால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை ஒன்றில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன் வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து, நிந்தவூர் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் தரம் 9இல் கல்வி கற்கும் தனது மகனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்றுச் சென்றுள்ளதுடன், மகனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளதாகத் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தனது மகன் நேற்று (02.08.2023) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுச்சென்றுள்ளதாகத் தாய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்கப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam