கெப்ரக வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வென்ச்சர் மேற்பிரிவு பகுதியில் கெப் ரக வாகனத்தின் பின்புறத்திலிருந்து தவறி விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
நோர்வூட்டிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்தின் பின்புறத்தில் சென்றுகொண்டிருந்த சிறுமி, வண்டியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
50 ஏக்கர்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சம்பவத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.