வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கு எதிராக 125 குற்றச்சாட்டுகள்..
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்று ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவுக்கு எதிராக 125 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்று ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ள ஸ்ரீ ஜெயவர்தன மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, கடந்த வருடம் ஜுன் மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்ட்டிருந்தார். அதன் பின் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயணத் தடை
இந்நிலையில், தன் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன மீதான பயணத் தடையை ஜூன் 14 முதல் ஜூலை 16 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
அப்போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸ் இன்ஸ்பெக்டர் திலும் துஷாந்த, வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதை முழுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேக நபருக்கு எதிராக 125க்கும் மேற்பட்ட குற்ற்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பொலிஸ் இன்ஸ்பெக்டர் திலும் துஷாந்த, நீதிபதியிடம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பயணத்தடையை நீக்கும் விவகாரம் குறித்து ஜூன் 5 அன்று பரிசீலிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam