வடமராட்சி கடலில் தொடரும் சோகம் - 2ஆவது நாளாக தேடுதல் பணிகள் தீவிரம்

Jaffna Nothern Province Sri Lanka Fisherman Ship
By Rakesh May 29, 2026 08:55 PM GMT
Report

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகள் இன்று(28.05.2026) இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை - முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து நேற்றுமுன்தினம்(27.05.2026) இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற நான்கு கடற்றொழிலாளர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்

கடலில் மூழ்கிய 4 கடற்றொழிலாளர்கள்

பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) மற்றும் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54), அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகிய நால்வருமே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

நேற்று(28) இரு பகுதிகளில் இருந்தும் 10 படகுகளில் சென்ற உள்ளூர் கடற்றொழிலாளர்கள் ஆழ்கடல் பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

வடமராட்சி கடலில் தொடரும் சோகம் - 2ஆவது நாளாக தேடுதல் பணிகள் தீவிரம் | Tragedy North Sea Search Divers 24 Boats 2Nd Day

இதன்போது, ஒரு படகு வலைகளுடன் கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதை கடற்றொழிலாளர்கள் நேரில் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன், கடலில் மிதந்த ஒரு பகுதி வலைகள் மற்றும் சில கடற்றொழில் உபகரணங்களை மீட்டு நேற்று மாலை கரைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில், படகு மூழ்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து 24 விசைப்படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் பெருமளவிலான கடற்றொழிலாளர்கள், படகு மூழ்கிய இடத்தை நோக்கி விரைந்துள்ளனர்.

மூழ்கிய படகுக்குள் கடற்றொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் அடிப்படையில், சுழியோடிகளின் உதவியுடன் கடலுக்கு அடியில் இறங்கித் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்படை மீது தொடரும் அதிருப்தி

கடற்றொழிலாளர்கள் காணாமல் போனது முதல் பருத்தித்துறை முன்னாள் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உரிய தரப்பினருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும், தேடுதல் பணிகளுக்காகக் கடலுக்குச் செல்லும் 24 படகுகளுக்குத் தேவையான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளையும் அவர் முன்னின்று வழங்கி வருகின்றார்.

வடமராட்சி கடலில் தொடரும் சோகம் - 2ஆவது நாளாக தேடுதல் பணிகள் தீவிரம் | Tragedy North Sea Search Divers 24 Boats 2Nd Day

இதேவேளை, கடற்றொழிலாளர்கள் காணாமல்போய் 24 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் கடந்துள்ள நிலையிலும், அதிநவீன வசதிகளைக் கொண்ட இலங்கை கடற்படையினரோ அல்லது கடற்றொழில் அமைச்சரோ இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ மீட்பு நடவடிக்கைகளையும் எடுக்காமை குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சக கடற்றொழிலாளர்களும் தங்களின் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நிலைமைகளைக் கேட்டறிந்து, அனர்த்த முகாமைத்துவப் பிரிவினருக்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கிய படகை மீட்கவும், கடற்றொழிலாளர்களின் நிலையை அறியவும் வடமராட்சி மக்கள் சோகத்துடன் கடற்கரையில் காத்திருக்கின்றனர்.

இனி எரிபொருள் விலை குறையாது..! பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்

இனி எரிபொருள் விலை குறையாது..! பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி விவகார வழக்கு: ஆரம்பமாகவுள்ள நாமலுக்கு எதிரான விசாரணை

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி விவகார வழக்கு: ஆரம்பமாகவுள்ள நாமலுக்கு எதிரான விசாரணை

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US