1225 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்ட அரசாங்கம்
புதிதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரையில் 1225 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பணம் அச்சிடுதல், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி மற்றும் உள்நாட்டு கடன் தொகை அதிகரித்தல் ஆகிய காரணிகள் நாட்டின் பொருளாதார இலக்குக எட்டுவதில் பெரும் சாவல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றச்சாட்டு
கடந்த 2024ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இலங்கை மத்திய வங்கி 1225.9 பில்லியன் ரூபா அல்லது 1.2 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகளை மீறி புதிதாக பணம் அச்சிடுவது மீண்டும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களுக்கு புறம்பான வகையில் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வரையறையின்றி பணம் அச்சிட்ட காரணத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது முதல் கடன் தொகைகளும் கிரமமாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
பணம் அச்சிடல், அந்நிய செலாவணி கையிருப்பு குறைதல் போன்ற ஏதுக்களினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடையும் என ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் எதிர்வுகூறியுள்ளார்.
தேங்காய் சிதறுவதை போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதற வேண்டும்! கதவடைப்புக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan