யாழில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு!
யாழில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(7) யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவியது.
இதனால், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பாதிப்பு
அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam