சுனில் வட்டகலவின் கருத்து விசாரணை அதிகாரிகளை அவமானப்படுத்தியுள்ளது! சஞ்சீவ எதிரிமான்ன ஆதங்கம்
ஐஸ் இராசாயனங்கள் கொண்டு வந்தமை தொடர்பில் சில புகைப்படங்களை காண்பித்து பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்த கருத்து விசாரணை அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகல பல புகைப்படங்களை காண்பித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மொட்டு தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
சுனில் வட்டகலவின் கருத்து
தொடர்ந்துரையாற்றிய அவர்,''அவரின் கருத்து எவ்வித அடிப்படை காரணங்களையும் கொண்டிராத அரசியல் மயமான கருத்தாகும். அரசியலில் ஈடுபவர்களை ஆராய்ச்சி செய்து சேர்த்துக் கொள்ள முடியாது.
உள்ளுராட்சி தேர்தலில் 9000 பேரை நாம் கட்சியில் போட்டியிட இணைத்துக் கொண்டோம்.அவ்வாறு ஆராய்ச்சி செய்வது கடினமானதாகும். அவர் எமது கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டவராவார்.சம்பவம் நடந்த அந்த நிமிடத்தில் கட்சியின் செயலாளரால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது கட்சி துணை போனதுமில்லை அத்தோடு அவ்வாறாவர்களை காப்பற்றப் போவதுமில்லை. ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஹீப்ராயிம்,அவரின் இரு மகன்களும் தற்கொலையாளிகளாக உயிரை மாய்த்துக் கொண்டனர்.
ஈஸ்டர் தாக்குதல்
அவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் உறுப்பினராக இருந்தார். அவ்வாறான ஒரு நிகழ்வாகவே நான் இதையும் பார்க்கிறேன்.
அது தொடர்பில் அன்று ஜனாதிபதி அநுரவும் நான் மேற்குறிப்பிட்ட கருத்தையே தெரிவித்திருந்தார்.
ஆதலால் ஜனாதிபதி அவர்களே இவ்விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
