இஸ்ரேல் நடத்திய திடீர் வான் தாக்குதலில் 10 பாலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பலி
இஸ்ரேல்(Israel) இராணுவம் காசாவின் ரஃபா நகரில் வணிக பொருட்களை பாதுகாத்து வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது வான்தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயம் அடைந்தோர் ஐரோப்பிய காசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பொருட்கள்
குறித்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் கருத்து ஏதும் தெரிவிக்காததோடு சமீபத்தில் மேற்கு கரையில் இருந்து காசா முனைக்கு வணிக பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளித்திருந்திருந்தனர்.
இதனால் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் வணிக பொருட்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை இதுபோன்று வணிக பொருட்கள் கொண்டு சென்றபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2ஆவது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதலால் 37396 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 50 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
