அமெரிக்காவின் 10 உலங்குவானூர்திகள் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்பு - இருதரப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்து
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 'சீ ரேஞ்சர்' (Sea Ranger) பன்னோக்கு உலங்குவானூர்திகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, இன்று (23) நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது.
பொருத்தமான தொழில்நுட்பப் பரிசோதனைகள்
இதன்போது, இலங்கை விமானப்படைக்கும் அமெரிக்க பசிபிக் விமானப்படைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையொன்றும் கையெழுத்திடப்பட்டது.
இதில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் திலான் குணதிலக்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த TH-57 உலங்குவானூர்திகள் மூலம் இலங்கை விமானப்படையின் விமானி பயிற்சித் திறன்களை மேம்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்தவும், அத்துடன் பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் அவசர பொதுச் சேவை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான விமானப் பணியாளர்களின் பயிற்சிகளுக்கும் இந்த உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து விசேட சரக்கு போக்குவரத்து வசதிகள் மூலம் கடந்த 2026 ஜூன் 01 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த உலங்குவானூர்திகள், இரத்மலானை விமானப்படைத் தளத்தில் வைத்து ஒன்றிணைக்கப்பட்டன.
இலங்கையின் காலநிலை மற்றும் விமான செயல்பாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமான தொழில்நுட்பப் பரிசோதனைகள் மற்றும் சோதன ஓட்டங்களின் பின்னர், இவை உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.




செம்மணி விவகாரத்தில் சோமரத்ன ராஜபக்ச மீதான விசாரணை தீவிரப்படுத்த வேண்டும்..! ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam