சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா காலமானார்
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று காலமானார்.
மருதமுனையைச் சேர்ந்த உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று கடந்த ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் இன்று நண்பகல் 12 மணியளவில் காலமானார்.
உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.
2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஒன்பதாவது பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் . எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.
சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்த வேளையில் இன்று காலமானார்.
அன்னாருக்கு சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் - கவ்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
