யாழ்.நகரில் விடுதிகளை சுற்றி வளைத்த பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு
யாழ்.நகரில் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (19) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது.
இரண்டு பிரதான சந்தேகநபர்களிடம் இருந்து ஆறு கிராம் , இரண்டு கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டதுடன் ஏனையவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன சிறியளவில் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், கைதானவர்கள் யாழ் நகர் மற்றும் புற நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam