நாமலும் மகிந்தவும் தீட்டும் சதி திட்டம்..!
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என புலனாய்வுத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த நிலையில், மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த போராட்டத்திற்கு சில ஆயிரக்கணக்கானவர்களே கலந்து கொள்வார்கள் என அரச புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடினால் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போராட்டம் தோல்வி அடைந்ததாகவே அமைந்து விடும்.
இதன்மூலம் ஆட்சியை கைப்பற்ற முனைப்பிலுள்ள ராஜபக்சர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதனை காரணமாக கொண்டே இந்த போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |