இலங்கை போதகருடன் தொடர்புள்ள சிம்பாப்வே இராஜதந்திரி கடத்தல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
இலங்கையில் உள்ள போதகர் ஒருவருடன் தொடர்புகொண்ட சிம்பாப்வேயின் ராஜதந்திரி, தம்மீது சுமத்தப்பட்டுள்ள தங்க கடத்தல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அண்மையில் வெளியான அல் ஜசீராவின் ஆவணத்தொகுப்பில் இவர் தங்கம் கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள், தமது புகழைக் கெடுக்கும் ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட சூழ்ச்சியின் ஒரு பகுதியாகும் என்று சிம்பாப்வே ஜனாதிபதியின் தூதுவரும் போதகருமான யூபெர்ட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.
தங்க கடத்தல் திட்டம்
இலங்கையின் போதகரான ஜெரோம் பெர்னாண்டோவுடன் தொடர்பு கொண்ட யூபெர்ட் ஏஞ்சல், தமது ராஜதந்திர பதவியை பயன்படுத்தி, தங்கக் கடத்தல் திட்டம் மூலம் மில்லியன் கணக்கான டொலர்களை சலவைச்செய்ய முயன்றதாக சிம்பாப்வேயில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் 2018- 2020 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் இலங்கைக்கு பயணம் செய்தபோது இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரையும் சந்தித்திருந்தார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
