இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2ஆவது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெற்றது.
சிம்பாப்வே வெற்றி
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது.
போட்டியில் முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் கமில் மிசார 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
வெற்றியிலக்கு
இதன்படி சிம்பாப்வே அணிக்கு 81 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
இதன்படி இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளன.



