அமெரிக்காவில் ஜிம்மி கார்டருடன் இணைந்து பணியாற்றிய ஈழத்தமிழருக்கு நேர்ந்த சோகம்
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அமெரிக்காவில் காலமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க் நகரில் வசித்து வந்தவருமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராவார்.
1970 ஆம் ஆண்டில் போராட்ட வரலாற்றை இவரைத் தவிர்த்து எழுதிவிட முடியாது எனுமளவிற்கு முன்னணிப் போராளியாகத் திகழ்ந்தவர்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமெரிக்காவின் (AIUSA ) சர்வதேச வழக்கறிஞர் பிரிவின் இயக்குநராகவும், மனித உரிமைக் கண்காணிப்பாளராகவும், உலகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் வோஷிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் அகாடமியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். (Professor at Washington College of Law’s Humanitarian & Human Rights Academy). அவர் முன்னாள் ஜனாதிபதி கார்டருடன் (Former US President Jimmy Carter) இணைந்து உலகம் முழுவதும் தேர்தல்களைக் கண்காணித்துள்ளார் மற்றும் பிலடெல்பியாவில் தேர்தல் நீதிபதியாகப் (Judge of Elections in Philadelphia) பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு பல பெரும் சரித்திரமாக இருந்தவரின் பணிகள் அமைதியாக யாரும் அறியா வண்ணமே இருந்துள்ளது.
இந்தவிடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam