பிரித்தானியாவில் கோவிட் மரணங்கள் பூச்சியமாக பதிவானது!
பிரித்தானியாவில் 2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் நாளாந்த அறிக்கையின் படி, முதல் முறையாக கோவிட் மரணங்கள் பூச்சியத்தில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 3,165 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை நேற்றைய தினம் 3,383 ஆக காணப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 2,493 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு குறித்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், நாளாந்த உயிரிழப்புகள் குறித்த அறிக்கைகளின் தரவுகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களிலும், வாரத்தின் தொடக்கத்திலும் குறைவாகவே இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை நிகழும் மரணங்கள் அடுத்த நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார செயலாளர் மட் ஹான்காக் கருத்து வெளியிடுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைவார்கள்” என கூறியுள்ளார்.
“தடுப்பூசிகள் தெளிவாக செயல்படுகின்றன, உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கிறது.
எவ்வாறாயினும், சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நல்ல செய்தி இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் கோவிட் வைரஸை வெற்றிகொள்ளவில்லை என்பது” எங்களுக்கு நன்றாக தெரியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானியான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.