புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை
ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் திட்டம்
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
"நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன்.
அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம்.
அத்துடன் இந்த விஷயத்தில் மட்டும் அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்," என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் சந்திக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)