நடிகர் விஜய்க்கு 'வய்' பிரிவு பாதுகாப்பு: வெளியான காரணம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு(Vijay) ‘வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் அரசியல் கட்சி மாநாட்டை நடத்தியிருந்தார்.
இவற்றை எல்லாம் தாண்டி நிர்வாகிகளை சந்திப்பது, பொறுப்பு வழங்குவது என 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தீவிர களப்பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
தொடர் விமர்சனங்கள்
விஜய் வீட்டிலிருந்து கொண்டே அரசியல் செய்து வருகிறார் என அவர் மீது தொடர் விமர்சனங்கள் வலுத்திருந்த நிலையில் எதிர்வரும், ஏப்ரல், மே மாதங்களில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், விஜய் தரப்பில் இருந்து மத்திய அரசிடம் ‘வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.
விஜய்க்கு ‘வய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமிழகத்துக்குள் விஜய் எங்கு சென்றாலும் அவருடன் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த ‘வய்’ (Y) பாதுகாப்பு அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை.
நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களுக்கு உளவுத் துறை அறிக்கையின் படி மத்திய அரசின் ‘வய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசாங்கம்
இந்திய அரசாங்கமானது, வகிக்கும் பதவி மற்றும் அச்சுறுத்தலின் தன்மை குறித்து SPG, Z+, Z, Y+, Y, X என்று ஆறு பிரிவுகளாகப் பிரித்து உள்ளது.
Y + பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற தேசிய பாதுகாப்பு படை எனும் சிறப்பு பிரிவைச் சேர்ந்த, 2 முதல் 4 வீரர்கள் தேவைகேற்ப இருப்பார்கள். மொத்தமாக 11 பாதுகாப்பு வீரர் இருப்பர். இதில் 2இல் இருந்து 3 வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
இந்த பாதுகாப்பு பணிக்கும் ஒரு தனிப்படைக்கு 15 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த Y பிரிவு பாதுகாப்புதான் தமிழக வெற்றிக் கழகத்தோட தலைவர் விஜய்க்கு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற தேசிய பாதுகாப்பு படை எனும் சிறப்பு பிரிவைச் சேர்ந்த 1 முதல் 2 வீரர்கள் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.இதனுடன் எட்டு காவல்துறையினரும் இருப்பார்கள்.
இந்த பிரிவில் 1 அல்லது 2 வாகனங்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும்.
ஒரு தனிப்படைக்கு மாசம் 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படும். இந்த 12 லட்சம் ரூபாயும் மத்திய அரசு தான் செலவு செய்யும்.
தமிழ் நாட்டுல Y பிரிவு பாதுகாப்பு படை தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது மூலமாக, மத்திய அரசின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். மேலும், விஜய்யை தன்பக்கம் ஈர்க்க பாஜக காய் நகர்த்துவதாகவும் சில கருத்துக்கள் எழுந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
ஆனால், உளவுத்துறை கொடுத்த தகவலின் படிதான் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்று முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விளக்கம்
இந்த நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(K. Annamalai ]விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து கூறியதாவது,
அச்சுறுத்தல் இருக்கிறது என தகவல் வந்ததன் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு தருவது போல தவெக தலைவர் விஜய்-க்கு வய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஏன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை? பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும். இதில் அரசியல் கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)