இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கா! ட்ரம்புக்கு விசேட கடிதம்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நடவடிக்கை தொடர்பில் விசேட நடவடிக்கையை மேற்கொள்ள அந்நாட்டு ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ';இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும்,சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
உள்ளக விவகாரங்கள்
நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அத்துடன் வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார். எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது அமெரிக்க தூதுவர் முறையற்ற வகையில் செயற்பட்டார்.
பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
ஆகவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவின் புதிய அரசாங்கம்
பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
