கதிர்காம பொது பேருந்து நிலையத்திலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு
கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகில் தூக்கிட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு (14) இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கழிப்பறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் குறித்த நபரின் சடலம் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
பேருந்து கழிவறை
உயிரிழந்த நபர், கதிர்காமம் பகுதிக்கு வெளி ஊரிலிருந்து வந்தவர் என்று உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அவர் பல நாட்களாக கதிர்காமம் நகரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததாகவும் அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நபரின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
