மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மலையகப் பகுதிகளிலிருந்து கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை இன்று (15) உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலை
இந்நிலையில், தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ தக்காளி மற்றும் எலுமிச்சையின் மொத்த விலை சுமார் 80 ரூபாயாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், ஒரு கிலோ பாகற்காய் மொத்த விற்பனை விலை 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan