தீவிரமடையும் யுத்தம்: உக்ரைனின் முக்கிய இடத்தை குறிவைத்த ரஷ்யா
கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையமொன்றின் இன்று(14) காலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்ய-உக்ரைன்(russia ukraine) போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. போர் தொடங்கியபோது ரஷ்யா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது.
பின்னர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கின.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தற்போது இரு நாடுகளும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள், இராணுவ ஆயுத கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் உள்ள 4ஆவது உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கொன்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூரை ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்துள்ளது.
எனினும், அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறவில்லை.வழக்கமான நிலையில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அணுமின் நிலையம்
1986ஆம் ஆண்டு இந்த அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
உலகில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக கதிர்வீச்சு வெளியேறாத வகையில் 4ஆவது அணு உலைக்கு மேல் பாதுகாப்பிற்கு கொன்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அணுஉலையில் எஞ்சியிருக்கும் கதிரியக்கம் வெளியேறாத வகையில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான 3 வருட சண்டையில் உக்ரைனில் உள்ள நான்கு அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தெற்கு உக்ரைனில் ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.
மேலும், உலகில் உள்ள மிகப்பெரிய 10 அணுஉலைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)