உக்ரைனுக்கு அதிகரிக்கும் ஆதரவு! திணறும் ரஷ்யா
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இத்தாலியில் செர்ஜியோ மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோரை சந்தித்து உக்ரைனிய மக்களுக்காக கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸுடன் நேரில் சந்தித்து இன்று (13.05.2023) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அரசியல் சூழ்நிலை
வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis), ஜெலென்ஸ்கி ஆகியோர் உக்ரைனில் நடக்கும் போரினால் தூண்டப்பட்ட மனிதாபிமான மற்றும் அரசியல் சூழ்நிலை பற்றி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உரையாடலின்போது, போர் முடிவுக்கு வர பாப்பரசர் தொடர்ச்சியாக பிரார்த்தனையை செய்வதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தாலியின் பிரதமர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பாப்பரசர் பிரான்சிஸை ரோம் நகரில் சந்தித்து பேசியுள்ளார்.
உக்ரைனியர்களின் சோகம்
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'நான் பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்தேன். மில்லியன் கணக்கான உக்ரைனியர்களின் சோகத்திற்கு அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நாடு கடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான உக்ரைனிய குழந்தைகளைப் பற்றி நான் பேசினேன். அவர்களை வீடு திரும்பி செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கூடுதலாக, உக்ரைனில் நடக்கும் ரஷ்ய குற்றங்களைக் கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
ஒரு நியாயமான அமைதியை அடைவதற்கான ஒரே பயனுள்ள வழிமுறையாக நமது அமைதி பற்றியும் பேசினேன். நான் அதை செயல்படுத்த முன்மொழிந்தேன்' என தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
