ஜெலென்ஸ்கி - ஸ்டார்மரின் அதிரடி நடவடிக்கைகள்: அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymir Zelenskyy), பிரித்தானிய பிரதமர், கெய்ர் ஸ்டார்மருடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரவிதித்துள்ளார்.
ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி கருத்து மோதலுக்கு பின்னர், லண்டனில் இடம்பெற்ற மாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் பல உக்ரைனுக்கு ஆதரவு வெளியிட்டிருந்தன.
இதனை தொடரந்து, ஒரு நிலையான அமைதியே எமக்கு தேவை என தெரிவித்திருந்த ஜெலென்ஸ்கி, குறித்த நாடுகளுடன் முக்கிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
அதன் ஒரு நகர்வாக தற்போது பிரித்தானியாவுடன் பேசியமை குறித்து ஜெலென்ஸ்கி, எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
போர் முடிவு
குறித்த பதிவில், "நான் பிரித்தானிய பிரதமர் கெய்ர் உடன் பேசினேன். தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தோம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
எங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து, விரைவில் உத்தரவாதமான அமைதியை அடையவும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் எல்லாவற்றையும் செய்கிறோம். நம் அனைவருக்கும் அமைதி தேவை.
I spoke with UK Prime Minister @Keir_Starmer. We discussed the current developments and exchanged views on the next steps.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 4, 2025
We are coordinating our positions and doing everything to achieve guaranteed peace as soon as possible and bring an end to this war.
Peace is needed for… pic.twitter.com/Cv6SOykPi7
தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் கூடிய நியாயமான அமைதி. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதன் தலைமையுடன் சேர்ந்து, இது முற்றிலும் அடையக்கூடியது.
இந்த சவாலான நேரத்தில் ஆலோசனை மற்றும் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உக்ரேனியர்களுக்கும் எங்கள் பகிரப்பட்ட பாதுகாப்பிற்கும் பிரித்தானிய மக்கள் செய்த அனைத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |