போர்நிறுத்தத்தை குழப்பும் ஜெலன்ஸ்கி: கடுமையாக சாடும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி போர்நிறுத்த பேச்சுவார்த்தையை குழப்புவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா கையகப்படுத்திய கிரிமியாவை உக்ரைன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சமாதானம் ஏற்பட வழிவகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இரு தரப்பும் உடன்பாடு செய்யாவிட்டால் நாங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து விளக்குவோம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உறுதியான முடிவு
இதேவேளை, கிரிமியாவை ரஷ்யாவுக்கு வழங்குவது ட்ரம்பின் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
குறித்த யோசனை உக்ரைன் அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க, உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தீவிரமாக்கியுள்ள நிலையில், சில நகரங்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாலும், ஒரு உறுதியான முடிவை நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெளிவாக இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
