ஜம்மு காஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: எல்லைகளை மூடும் இந்தியா
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணிகள் மீதான படுகொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
எல்லைகளை மூடுதல்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 27 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு கூட்டத்தில் எல்லைகளை மூடுதல் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
