சஹ்ரான் தலைமையில் நடத்தப்பட்ட சோதனை வெடிப்பு சம்பவம்: நாடாளுமன்றில் அம்பலம்
சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட சோதனை வெடிப்பு சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இன்று நாடாளுமன்றில்(07.12.2023) எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த போதே அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி மட்டக்களப்பு தாழங்குடாவில் சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட சோதனை வெடிப்பு சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சஹ்ரான் ஆக்கிரமித்த பகுதி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுசில் பிரேமஜயந்த,
“முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார்.
இந்தத் தகவல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜயசுந்தர மற்றும் செனவிரதன ஆகிய இருவருக்கும் சஹ்ரான் ஆக்கிரமித்த பகுதி மற்றும் அவர்களது வலையமைப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
