யாழில் சிக்கிய பெண் உட்பட இரு இளைஞர்கள்! கதிகலங்கும் படையினர்
யாழ்ப்பாணத்திலே போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையிலே, குறித்த சம்பவம் தொடர்பில் பெண்கள், இளைஞர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழில் இன்றையதினம்(3) கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அத்தோடு, இதன் காரணமாக, போதை மாத்திரைகளுக்கான கேள்வியும் அதிகரித்ததால், அவற்றின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த இளைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம்(2) பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் ஜே.கே பாய் இற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வேறு மாகாணங்களுக்கு வெளியேறி செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |