பருத்தித்துறை பொலிஸார் அதிரடி: மூன்று கோடிக்கு மேற்பட்ட கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்றைய தினம் நூறு கிலோவிற்கும் மேற்பட்ட 47 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் தற்போது போதை அற்ற நாடு வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸாரின் தீவிர கண்காணிப்பிலிருந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கேரள கஞ்சாவை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிலுள்ள கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழு சுற்றிவளைத்து 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் கைது
அத்துடன், படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் உட்பட நால்வர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களும் மற்றும் கஞ்சா படகு உட்பட்ட பொருட்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இதில் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் மூன்று கோடிக்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த நால்வரையும் சான்றுப்பொருட்களையும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதி மன்றில் முற்படுத்தி தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடபான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam