கிளிநொச்சியில் இளைஞர்கள் அதிரடிக் கைது..! மாவீரர் வாரத்தில் பொலிஸாரின் அடாவடி
கிளிநொச்சி - டிப்போ சந்தியில் வழமைபோன்று மாவீரர் நினைவு வளைவு அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்ற பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் இன்று (23.11.2026) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பலர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களும், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sudaron அவரால் எழுதப்பட்டு, 22 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.