மதுபோதையில் அட்டகாசம் செய்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் வீதிகளில் அட்டகாசம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 25 வயது 28 வயது மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேகநபர்களையும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது மது அருந்தியமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் தொடர்பில் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை நீதிமன்றில் பல வழக்குகள் இடம்பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருந்த போதிலும் மூன்று இளைஞர்களையும் பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு இளைஞர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பொலிஸார் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்றில்
நாளை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.