அர்ச்சுனா எம்பி விரைவில் சிறைசெல்ல நேரிடும்! இளங்குமரன் எம்பி எச்சரிக்கை
அர்ச்சுனா இராமநாதனும் எம்பியும் விரைவில் சிறை செல்ல நேரிடும் என்று இளங்குமரன் எம்பி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இங்கே சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு ஆளும் கட்சியே துணை போவதாக குத்துச்சாட்டை முன்வைத்திருந்தார்.
புலம்பெயர் பணம்
இது தொடர்பாக வடமாட்சி கிழக்கிற்கு நேற்று(2) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட விரோத தொழில்களை எவ்வாறு நிறுத்துவது என்பது எங்களுக்கு தெரியும் அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் நட்பு ரீதியாக என்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் முக்கியமாக அவர் தெரிவித்த விடயம் என்னவென்றால் youtuber என்னை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
அதனால் என்னை வைத்து பணம் சம்பாதிக்க நான் எவரையும் அனுமதிக்க மாட்டேன் ஆகவே நானே youtube செய்து நான் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்கிறேன் ஆகவே அர்ச்சுனா இராமநாதனின் இலக்கு பணம் சம்பாதிப்பது இன்று 15 கோடி புலம்பெயர் மக்களை ஏமாற்றி அவர் பணம் சம்பாதித்திருக்கிறார்.
விரைவில் சிறை
ஆனால் இப்போது பணம் கொடுத்த புலம்பெயர் தேச மக்களும் கொடுக்காத மக்களும் அர்ச்சுனாவை பற்றி உணர்ந்து விட்டார்கள் அதனால் அவர்களுடைய தொடர்பு இல்லாததால் தற்போது அச்சுனா நாமலை வைத்து ஐஸ்லாந்து ஜனாதிபதி நாமலின் தலைமையின் கீழ் சுகாதார அமைச்சராக இருந்து கொண்டு எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று கற்பனை காணுகிறார்.
ஆகவே அர்ச்சுனா இராமநாதனும் விரைவில் சிறை செல்ல நேரிடும்.
வெளிநாட்டு வாழ் உறவுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களையே கேவலப்படுத்தும் ஒருவர் தான் இராமநாதன் அர்ச்சுனா புலம்பெயர் உறவுகள் தங்களுடைய தாய் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஏதோ ஒரு நம்பிக்கையில் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பெருந்தொகையான பணத்தை வழங்கினார்கள் அந்த நேரம் வேலை கிடைத்தால் போதும் என்று இருந்தோம் ஆனால் தற்போது சந்தோசமாக இருப்பதாக தன்னிடம் அர்ச்சுனா எம்பி கூறினார்.
அவருக்கு இங்கு கட்சிக்காரியாலயம் என்று ஒன்றும் இல்லை நாமலின் வீட்டில் இருப்பதாக நான் உணர்கிறேன் இவ்வாறு ஊழலில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனாவிற்கு வட மாகாண மக்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



