தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு பெண்கள் மர்மமான முறையில் மரணம்
பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரெனவும் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் பெண்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த 28 வயதான திலினி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் நேற்று பிற்பகல் அலுபோமுல்லவில் நடைபெற்றுள்ளது.
இரத்த உறைவு
மற்றைய யுவதியான 19 வயதான மலிஷாவின் இறுதிச் சடங்குகள் வாதுவையின் வெரகாமாவில் நடைபெற்றுள்ளன.
திலினியின் மரணத்திற்குக் காரணம் அவரது உடலின் முக்கிய இரத்த நாளத்தில் உருவான இரத்த உறைவு (த்ரோம்பஸ்) எனவும் இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் அதிகப்படியான சோர்வு, மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
திடீர் மரணம்
உயிரிழப்பதற்கு முன்பு உணவை உட்கொண்ட பிறகு அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறை பொது சுகாதார ஆய்வாளர், யுனிச்செலாவின் சமையலறையை ஆய்வு செய்து, அங்கிருந்து உணவு மாதிரிகளை எடுத்து, இரண்டு ஊழியர்களின் திடீர் மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பினார்.
எனினும் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நேற்று முன்தினம் நோய்வாய்ப்பட்டு பாணந்துறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



