அரசாங்கத்திற்குள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனா பகிரங்கம்
அரசாங்கத்திற்குள் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தை ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
தீர்வு வழங்குகின்றேன்..
இந்து மதம், பௌத்தம் மற்றும் இஸ்லாமில் இதுபோன்ற விடயங்களுக்கு இடமில்லை. யாருக்காவது இவ்விடயத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், நான் மருத்துவ முறைகள் மூலம் ஒரு தீர்வை வழங்குவேன்.
நாட்டை வீணாக்க முடியாது. வெளிநாட்டிலிருந்து ஆட்களை அழைத்து வந்து LGBTQ படங்களைக் காட்ட முடியாது. யாருடைய குழந்தையையும் அழிக்க நான் அனுமதிக்க மாட்டேன்.
இந்த நாட்டை அமெரிக்காவாக்காதீர்கள். அதை சட்டப்பூர்வமாக்கி எதிர்கால சந்ததியை அழிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

இன்று இரவு வரை அவதானமாக இருங்கள்..! வவுனியா - முல்லைத்தீவு உட்பட்ட சில மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



