யாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் (Jaffna)- வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (5) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் சென்ற பெண்ணொருவரிடம் இன்று காலை உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க நகையை அபகரித்து சென்றுள்ளனர்.
கைது நடவடிக்கை
குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கைதான சந்தேக நபரை நாளை (6) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |