ஜனாதிபதி ஊடகப் பிரிவில் காணாமல் போன பொருட்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு
ஜனாதிபதி செயலகத்தின் ஊடக பிரிவில் (PMD) இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பான வழக்கை ஓகஸ்ட் 6ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுப்புலி லங்காபுர இன்று (05) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காணாமல் போனமை தொடர்பில் வழக்கு தாக்கல்
ஜனாதிபதி செயலகத்தின் ஊடக பிரிவில் இருந்து ரூ.162 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
காணாமல் போன பொருட்கள் எங்கு சென்றன, அவை பிற துறைகளுக்கு மாற்றப்பட்டனவா, அவற்றின் உண்மை தன்மை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ், நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த விசாரணை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழுவொன்று அனுப்பிய பெயரிடப்படாத கடிதம் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பிக்கப்பட்டதாக விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |