அஹகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி
அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்
போதைப்பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் தற்போது வலான பைிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சமபவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.